அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, March 5, 2014

9 கட்டமாக லோக்சபா தேர்தல்: ஏப். 7 முதல் மே 12 வரை வாக்குப் பதிவு; மே 16ல் வாக்கு எண்ணிக்கை!

டெல்லி: லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்படுகிறது . ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு 15வது லோக்சபா பதவிக் காலம் 
 
முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று அறிவித்தார். 
 
தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் ஏப்ரல் 30, மே 7ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. தெலுங்கானாவில் ஏப்ரல் 30ம் தேதியும், சீமாந்திராவில் மே 7ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.
 
 அதே போல ஒடிஸ்ஸாவில் ஏப்ரல் 10ம் தேதியும், 17ம் தேதியும் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. 
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணையர் சம்பத் வெளியிட்ட தேர்தல் அட்டவணை விவரம்: 
 
 முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7-ந் தேதி 2 மாநிலங்களில் 6 தொகுதிகளுக்கு நடைபெறும்.
 
 2-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ந் தேதி 5 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெறும்.
 
 3வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 10-ந் தேதி 14 மாநிலங்களில் 92 தொகுதிகளுக்கு நடைபெறும்.
 
 4வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ந் தேதி 3 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும்.
 
 5வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17-ந் தேதி 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 122 தொகுதிகளுக்கு நடைபெறும்.
 
 6வது கட்ட வாகுப் பதிவு ஏப்ரல் 24-ந் தேதி தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நடைபெறும். 
 
 7வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 30-ந் தேதி 9 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நடைபெறும். 
 
 8வது கட்ட வாக்குப் பதிவு மே 7-ந் தேதி 7 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு நடைபெறும்.
 
 9வது கட்ட வாக்குப் பதிவு மே 12-ந் தேதி 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு நடைபெறும்.
மாநிலங்கள் வாரியாக தேர்தல் தேதிகள்:
 
 ஆந்திரா: ஏப்ரல் 30, மே 7 :
 
அருணாசலப்பிரதேசம் ஏப்ரல் 9 

அசாம்:ஏப்ரல் 7, 12, 24 : 
 
பீகார்ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7, 12 
 
 சத்தீஸ்கர்: ஏப்ரல் 10, 17, 24 :
 
கோவா ஏப்ரல் 17

குஜராத்: ஏப்ரல் 30

ஹரியானா : ஏப்ரல் 10 : 
 
ஹிமாச்சல் பிரதேசம்மே 7

ஜம்மு காஷ்மீர்: ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7
 
ஜார்க்கண்ட்- ஏப்ரல் 10, 17, 24

கர்நாடகா: ஏப்ரல் 17
 
கேரளா: ஏப்ரல் 10

மத்திய பிரதேசம்: ஏப்ரல் 10, 17, 24

மஹாராஷ்டிரா :ஏப்ரல் 10, 17, 24

மணிப்பூர்: ஏப்ரல் 9, 17

மேகாலயா: ஏப்ரல் 9

மிசோரம்: ஏப்ரல் 9 : 
 
நாகலாந்துஏப்ரல் 9 : 
 
ஒடிஸ்ஸாஏப்ரல் 10, 17

பஞ்சாப்: ஏப்ரல் 30 : 
 
ராஜஸ்தான்ஏப்ரல் 17, 24

சிக்கிம்: ஏப்ரல் 12
 
 தமிழகம்: ஏப்ரல் 24 : 
 
திரிபுராஏப்ரல் 7, 12:
 
உத்தரப்பிரதேசம் ஏப்ரல் 10, 17, 24, 30, மே 7, 12
 
உத்தர்காண்ட்: மே 7 

மேற்கு வங்கம்:ஏப்ரல் 17, 24, 30, மே 7, 12

அந்தமான், நிக்கோபர்: ஏப்ரல் 10

சண்டிகர்: ஏப்ரல் 10 :
 
தாத்ரா- நாகர் ஹைவேலி ஏப்ரல் 30

டாமன் -டையூ: ஏப்ரல் 30-
 
லட்சத்தீவுகள்  ஏப்ரல் 10
 
டெல்லி: ஏப்ரல் 10 
 
புதுச்சேரி:ஏப்ரல் 24
 
 வாக்கு எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் பல கட்டமாக பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 16-ந் தேதியன்று ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்




No comments:

Post a Comment

Photobucket