அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, March 8, 2014

ரேஷன் பொருட்கள் வாங்க குடும்ப தலைவர்கள் வரவேண்டும்

காட்டுமன்னார்கோவில், : பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொருட்கள் வழங்கும் காலங்களில், முதலில் வருபவர்களுக்கே பொருட்கள் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் அரசு அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக போலி கார்டுகளை இனம் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தது. இதன் பிறகும் பொருட்கள் முழுமையாக ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை.

இதை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க குடும்பத்தலைவர் அல்லது குடும்ப அட்டையில் 12 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வர வேண்டும். பொருட்கள் வாங்கும் போது ரேஷன் கடைகளில் உள்ள பதிவேடுகளில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டைகளை பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வாங்கி சென்று பொருட்களை வாங்கி வந்தனர். மாற்றுதிறனாளிகள் சிலர் பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்லாமல் உறவினர்களையே நம்பி இருந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் பொருட்கள் உரியவர்களுக்கு மட்டுமே சென்றடையும் என்று கருதப்பட்டாலும் பெரும்பாலானோர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர் கூறும்போது,  மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தர வால் பொருட்கள் சரியான நபர்களுக்கு சென்றடையும். போலி கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படாது, என்றார்.

இந்த முறை கடந்த காலங்களில் நடை முறையில் இருந்தபோது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இந்ந முறையை செயல்படுத்துவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Photobucket