அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, February 8, 2014

லால்பேட்டையில் மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கும் நமதூர் மக்களின் பரிதாப நிலை..!

லால்பேட்டை,கடலூர் மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று. கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டு, வணிகம், போக்குவரத்து மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ஊர் என்று பலரால் அறியப்பட்டது. ஆனால் இந்த ஊரில்
மிக மிக முக்கியமான ஒரு வசதியான மருத்துவ வசதி இருந்தும் அது பயனற்று செயல்படாமல் உள்ளது என்பது வருத்ததிற்குறிய செய்தி.
இதனால்நம் மக்கள் படும் துயரம் எண்ணில் அடங்காதது. ஒருவருக்கு கீழே விழுந்து கை உடந்துவிட்டது, சாலை விபத்து, இரவில் நெஞ்சு வலி, என்றால் கூட காட்டுமன்னார்கோயில் ,சிதம்பரம் தூக்கி செல்லும் அவல நிலை. இது போன்ற அடிப்படை மருத்துவ உதவிக்கு முதலுதவிக்கு கூட இரவில் வந்து பரிசோதிக்கும் மருத்துவர் கூட நமதூரில் இல்லை என்பது தான் லால்பேட்டை யின் இன்றைய நிலை.
லால்பேட்டையில் எங்கு  அரசு மருத்துவமனை என்று தேடிச்சென்ற எங்களுக்கு அதிர்ச்சி,ஆஹா அருமை..லாரி நிற்கும் கூடாரமாக மாறிவிட்டது,கழிவரைக்குல் பாம்புகள்,மருத்துவமனை உள்ளே எதுவும் கிடையாது இரண்டு table, ஒரு- bed ,chair-2 அடிக்கிவைகப்பட்டுள்ளது…
குறைந்தது ஐந்து bed, இரண்டு மூன்று மருத்துவர்கள் பகலிலும் இரவிலும் மருத்துவர்கள் இருந்தாலே போதுமே..
இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்படுமா…?
லால்பேட்டையில்பல தனியார் மருத்துவமனைகள் உள்ளன இவை அனைத்தும் இருந்தும் ஒரு அவசர சிகிச்சைக்கு கூட நமதூர் மக்களால் இங்கு பரிசோதிக்க முடியாமல் கடலூர் ,புதுவை , சென்னை ஆகிய பகுதிகளுக்கு பல துயரங்ளுடன் பயனத்துக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கி செல்கின்றனர்.
தெருவிற்குதெரு மருத்துவமனை உருவாகிவிட்டது பின்பு எதற்கு மருத்துவமனை என்ற கேள்வியும் எழுகின்றன.. லால்பேட்டையில் அனைவரும் பணக்காரர்கள் கிடையாது ஏழைகளும் இருக்கின்றனர்..
மேலும் நமதூருக்கு மருத்துவமனையில் பணிபுரியும் நபர்கள் எங்கே சென்றார்கள்…??அவர்களுக்கு நமதூர் சார்பாக நிதி ஒதுக்கப்படு அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு வேறு எங்கோ பணிபுரிவதாக தகவல்கள் வருகின்றன..நமதூருக்காக மாதம் வரும் சத்து உணவுகள் எங்கே செல்கின்றன,இப்படி பல கேள்விகளை அடிக்கிக்கொண்டே போகலாம் சிந்தியுங்கள் மக்களே…!
எல்லாம் விழிப்புணர்வுக்காக இங்கே எழுத படுகிறது..!
பலஅரசியல் கட்சி தலைவர்கள் நமதூருக்கு பொதுக்கூட்டங்களுக்காகவும், சில நிகழ்ச்சிகளுக்காவும் வந்து செல்வதும் அவர்களிடம் மனு கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது..பொருத்தது போதும் தேர்தல் களம் நெருங்கிவரும் காலகட்டத்தில் அவர்களிடம் முறையான எழுத்துவடிவில் கோரிக்கை மனுவாகவும் பெற்றுக்கொண்டு வாக்களியுங்கள். நமதூர் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும்,அரசு மருத்துவமனையும் அமைவதற்கு அலட்சிய போக்கு தகற்கப்படும்…
ஏன் இந்த நிலை, இந்த நிலை எப்பொழுது மாறும்.லால்பேட்டை மக்களே! லால்பேட்டைஇளைஞர்களே! லால்பேட்டை அமைப்புகளே! அயல்நாட்டில் வசிக்கும் லால்பேட்டை அன்பர்களே! சமுக ஆர்வலர்களே! முறையான மருத்துவ வசதி இன்றி தவிக்கும் நமதூரின் நிலையை சற்று பாருங்கள். இதற்க்கு எப்பொழுது பிறக்கும் விடிவுகாலம்? பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற‌ ஆடம்பரமான செலவுகளை செய்யும் நாம் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை? வீனான விஷயங்களுக்கு நேரத்தை செலவழிக்கும் நாம் இதற்க்கு ஏன் நம் நேரத்தை செலவலிக்க தயங்குகிறோம்?
மருத்துவ வசதி என்பது ஒவ்வொரு ஊரின் அத்தியாவசிய தேவை. காய்ச்சல்,தலைவலிக்கு மருந்துவம் பார்க்கும் மருத்துவமனை மட்டும் நமதூருக்கு போதுமா?
அவசர சிகிச்சைக்கு என்னேரமும் செயல்படும் மருத்துவமனை லால்பேட்டைக்கு எப்பொழுது வரும்?
லால்பேட்டை அரசு மருத்துவமனையில் 24 மணிநேர சேவை எப்பொழுது?
இவை அனைத்தும் நம் மனதில் கேள்வியாக மட்டுமே இருக்கும், இதை வெளிகொண்டு வாருங்கள்!
தமிழக முஸ்லிம் பகுதிகளுக்கு முன்மாதிரியாய் இருந்திருக்க வேண்டிய நமதூர் சுகாதார, மருத்துவ வசதிகளில் வெட்கித் தலைகுனியக் கூடிய வகையில் மிக, மிகப்பின் தங்கியிருக்கிறோம்.
சில வருடங்களுக்கு முன் நம் ஊரில் சமுதாய நலன் நாடும் சிலர் ‘மகளிர்
மட்டும்’ (கலை, அறிவியல்) கல்லூரிக்கு முன்முயற்சி எடுத்தனர். அந்த முயற்சி இன்னமும் நிலுவையில் இருந்தால் அதனைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு பத்தோடு பதினொன்றாக கலை, அறிவியல் கல்லூரியாக அல்லாமல் குறைந்தது ஒரு ஐந்து வருடமாவது நன்கு திட்டமிட்டு “மகளிர் மட்டும் மருத்துவக் கல்லூரி” க்கு நாட்டிலேயே (அனேகமாக) முதலாவதாக விதையிட முயற்சி செய்யலாம். அந்த விதையை நலன் தரும் விருட்சமாக வளரச் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வான்,
இன்ஷா அல்லாஹ்.
காத்திருக்காமல் களத்தில் இறங்க வேண்டிய தருணம். தவறவிட வேண்டாம்.
 இன்றைய இளைய தலைமுறையில் சேவை அடிப்படையில் செயல்படக்கூடியவர்களை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை.
மருத்துவமனையின் வளர்ச்சிக்கு குறுகிய காலத் திட்டங்கள் மட்டுமின்றி நீண்டகாலத் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.
 லால்பேட்டையில் ஒரு மருத்துவ புரட்சியை உருவாக்குங்கள்!லால்பேட்டையின் நலனுக்காக பாடுபடும் லால்பேட்டையின் பொது அமைப்புகளே! லால்பேட்டையை வருங்காலத்தில் வழிநடத்த இருக்கும் இளைஞர்களே! நமதூரின் இந்த நிலையை மனதில்வைத்து ஒன்றுகூடி கலந்துரையாடுங்கள். ஒற்றுமையுடன் நல்லதொரு முடிவை எடுக்குமாறு கோரிக்கைகளுடன் நிறைவு செய்கிறோம்..
-சேவையுடன்,
லால்பேட்டை மெயின்ரோடு நண்பர்கள் (ss)

No comments:

Post a Comment

Photobucket