இந்தியாவில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகள்
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் இந்திரேஷ்குமாரின் ஆசியுடனே
நடத்தப்பட்டதாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு
வழக்கில் முக்கிய
குற்றவாளி அஸிமானந்தா தகவல் வெளியிட்டுள்ள சூழலில், ஹிந்துத்துவா
தீவிரவாதம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ
கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.சி.பி.ஐ விசாரணையின் மூலம் பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஸின் பங்கினைக்குறித்து வெளிக்கொணர முடியும். காரவன் மாத இதழிடம் அஸிமானந்தா கூறிய தகவல்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவது ஏதேனும் சிறிய குழுக்கள் அல்ல.ஆர்.எஸ்.எஸ்ஸுதான் உண்மையான குற்றவாளி என்பதை அஸிமான்ந்தாவின் பேட்டி தெளிவுப்படுத்துகிறது.முன்னர் அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், புலனாய்வுக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் விசாரணை
நடத்தவில்லை. 2008 ஆம் ஆண்டு மாலேகான், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு
வழக்குகளில் சதித்திட்டம் தீட்டியதும், நிதியுதவி
அளித்ததும் ஆர்.எஸ்.எஸ்ஸுதான் என்பது குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸை நோக்கி விசாரணை நடத்தப்படவில்லை.
குஜராத் மாநிலம் டாங்க் மாவட்டத்தைச் சார்ந்த ஜதின் சட்டர்ஜிதான்
பின்னர் அஸிமானந்தாவாக மாறினார். ஏதேனும் முஸ்லிம் பெயர்தாங்கிகள் மூலம்
குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அதனை முஸ்லிம்களின் தலையில் கட்டிவைக்கவும்,
வகுப்புக் கலவரம் நடத்தவும் ஜதின் சாட்டர்ஜியும், அவரது கும்பலும் சதி
ஆலோசனையை ஆரம்பித்தது குஜராத்தில் என்பதும் கவனிக்கத்தக்கது. செய்தியை
வெளியிட்ட காரவன் மாத இதழுக்கு எதிராக மிரட்டல் விடப்பட்டுள்ளது. காரவன்
மாத இதழுக்கு போதிய பாதுகாப்பை அளிக்கவேண்டியது அரசின் கடமை என்று தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment