அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, February 6, 2014

ஆலந்தூரில் ராணுவம் இடித்த பள்ளியை திரும்ப கட்டித்தர வேண்டும்.இல்லையேல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் போராட்டம் தொடரும்

காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் இராணுவத்தால் இடிக்கப்பட்ட பள்ளியை இன்று நேரில் சென்று பார்வையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா அவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
அனைத்து ஆவணங்களும் முறைப்படி உள்ள
இடத்தில் அரசு அனுமதியோடுதான் பள்ளி கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சரியாக விசாரணை செய்யாமல் இராணுவத்தினர் பள்ளியின் தூண்களை இடித்து உள்ளனர். இதனை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இடித்த பள்ளியை உடனே மீண்டும் கட்டித்தர வேண்டும். இல்லையேல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் போராட்டம் வீரியம் அடையும் எனவும் தெரிவித்தார்.

அப்போது காஞ்சிபுர மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், பொது செயலாளர் அபூபக்கர், வட சென்னை மாவட்ட செயலாளர் காஜா மற்றும் நிர்வாகிகள், செயல் வீரர்கள் உடனிருந்தனர்.

பள்ளி இடித்த போது எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால் பள்ளி இடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Photobucket