பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் சோசியல் டெமாக்ரடிக்
பார்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் ஹாஜா ஹுஸைனை (வயது 42) பத்து பேர் கொண்ட
சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
கடுமையாக காயமுற்ற ஹாஜா ஹுஸைன் திருச்சூரில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு கால்கள், தொடைகள், இடுப்பு,
கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டுபட்ட காயங்கள் உள்ளன. வலது கை தொங்கிய
நிலையில் இருந்தது. ஹாஜா ஹுஸனுக்கு ஆறரை மணிநேர நீண்ட அறுவை சிகிட்சை
நடைபெற்றது. வலதுகையை பொருத்தவும், தொடை எலும்புகளை சரிபடுத்தவும் அறுவை
சிகிட்சை நடைபெற்றது.
மதியம் 12 மணியளவில் பைக்கில் வாணியம் குளம் பகுதிக்கு சென்று
கொண்டிருந்த ஹாஜா ஹுஸைனை வெள்ளை நிற கார் மற்றும் பைக்கில் பின் தொடர்ந்த
கும்பல் துபாய்படி என்ற இடத்தில் வைத்து காரால் இடித்து அவரை கீழே தள்ளிய
பிறகு சரமாரியாக வெட்டியது. அருகில் உள்ள வீட்டிற்கு ஓடிய ஹாஜா ஹுஸைனை,
சிவசேனா ஹிந்து தீவிரவாத கும்பல் விடாமல் பின் தொடர்ந்து சென்று மீண்டும்
வெட்டியது. அவரது உடலில் 12 க்கும் மேற்பட்ட வெட்டுக்கள் உள்ளன.
இதனைத் தொடர்ந்து திரண்ட ஊர் மக்கள் ஹாஜா ஹுஸனை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆரம்பக் கட்ட சிகிட்சைக்கு பிறகு திருச்சூரில் உள்ள எலைட் தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக எலைட் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில காலமாக எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் மீது சிவசேனா தலைமையிலான
ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு
உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு
சொர்ணூர் டி.எஸ்.பி ஷரபுத்தீன், ஒற்றப்பாலம் சி.ஐ தினராஜ்,
எஸ்.ஐ.ரவீந்திரன் ஆகியோர் விரைந்தனர். சிவசேனா தீவிரவாத கும்பல் தலைமறைவாக
உள்ளது.
இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் கேரள
மாநில தலைவர் வழக்கறிஞர் அஷ்ரஃப் கூறுகையில், ‘வெட்டுக் குத்துகள் போன்ற
தாக்குதல்கள் மூலம் எஸ்.டி.பி.ஐ கட்சியை தளர்வடையச் செய்ய முடியாது’ என்று
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment