புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் முன்னாள்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை சேர்க்காதது கண்டனத்திற்குரியது என்று
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய
தலைவர் எ.ஸயீத்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியிருப்பது:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரை
போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த வழக்கில் அமித் ஷாவுக்கு பங்கில்லை
என்றா சி.பி.ஐ கூறுகிறது? எனில் போலி என்கவுண்டர் நடப்பதற்கு சற்று
முன்னரும், பிறகும் தொடர்ந்து இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏன் அமித்ஷாவை
தொடர்புக் கொண்டனர்? அரசியல் வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை தொடுவதற்கு
சி.பி.ஐ அஞ்சுகிறது.
ஐ.பி முன்னாள் சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் உள்ளிட்ட
ஐ.பி அதிகாரிகளை சி.பி.ஐ குற்றவாளிகளாக சேர்த்துள்ளது. ஆனால், தற்போது
அவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளதாக கூறுகிறது
சி.பி.ஐ.மத்திய அரசு விசாரணை நடத்த அனுமதி அளிக்குமா? என்பது
பொறுத்திருந்துதான் காணமுடியும். அனுமதி அளிக்காவிட்டால் இதுவரை நடந்த
அனைத்து விசாரணைகளும் கேலிக்குரியதாக மாறிவிடும். இவ்வாறு
எ.ஸயீத் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment