அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, February 15, 2014

SDPI கட்சியின் மாநில பொதுக்குழு மார்ச்-1 ல் சென்னையில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு பற்றி பொதுக்குழுவில் முடிவு!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
எஸ்.டி.பி.ஐ கட்சி மிக குறுகிய காலத்தில் தேசம் முழுவதும் வளர்ந்து வரும் தேசிய அரசியல்
கட்சியாகும். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் அதிகாரம் மற்றும் உரிமைகளுக்காக எஸ்.டி.பி.ஐ கட்சி போராடி வருகிறது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி கேரளா, கர்நாடக, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடவுள்ளது.

தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்களையும், ஆயிரக்கணக்கான கிளைகளையும் தமிழகத்தில் கட்சி பெற்றுள்ளது.

கடந்த சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு கண்ணியமான வாக்குகளை பெற்றுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு பற்றி தீர்மானிக்க கட்சியின் மாநில பொதுக்குழு மார்ச் 1 ல் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு சட்டம் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெறும். அதில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். அன்று இரவு தங்கசாலை மணிக்கூண்டு அருகே பொதுக்குழு தீர்மான விளக்க பொதுகூட்டம் நடைபெறும். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளளார்.

No comments:

Post a Comment

Photobucket