அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, January 22, 2014

வீராணம் ஏரியின் கரை ஒரத்தில், விளை நிலங்கள் சேதப்படுத்தும்

 காட்டுமன்னார்கோவில் அருகே ருத்திரசோலை பகுதியில் உள்ள  வீராணம் ஏரியின் கரை ஒரத்தில், விளை நிலங்கள் உள்ளது. வீராணம் ஏரியின் மூலமே பாசனம் பெற்று விவசாய பணிகள் நடைபெறுகிறது.


இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளது. தண்ணீர் ஏரியில் உள்ள காலங்களில் ஏரியின் உள்ளே மரங்களில் தங்குகின்றன. அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள் இருக்கும்போது மயில்கள் பயிர் செய்யப்பட்ட வயல்களில் புகுந்து கூட்டமாக நெற்பயிரை சேதப்படுத்தி வருகின்றன. ஆண்டு தோறும் தொடர்ந்து இதே போன்று நெற்பயிரை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

இதுபற்றி இதே ஊரை சேர்ந்த விவசாயி கோபால் கூறும்போது, கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வீராணம் ஏரிக்கு மயில்கள் வந்தன. இவை மாலை நேரத்தில் இந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு கூட்டமாக சென்று நெற்பயிரை மிதித்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த 4 தினங்களாக எனது வயலில் விளைந்த நெற்பயிரை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் நேற்று முன்தினம் அறுவடை செய்தேன். இந்த பகுதியில் மயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

எனவே, வனத்துறையினர் மயில்களை பிடித்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர செய்ய வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

Photobucket