குழந்தைகளுக்கு போலியோ
சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்காக
கடலூர் மாவட்டத்தில் 1,613 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர்
ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில்
பிறந்த குழந்தை முதல் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு வருகிற 19-ஆம் தேதியும்,
அடுத்த மாதமும் இரு தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இதற்காக நகர்ப்புறம் மற்றும்
கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில்
முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,512
மையங்கள் மற்றும் மாவட்ட எல்லை ஓரங்கள் குடிசைப் பகுதிகள், புதிதாக உருவான
காலனிகள், பணி நிமித்தம் இடம் பெயர்ந்து வாழும் மக்கள் உள்ள பகுதிகளில் 101
சிறப்பு மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே வரும் 19-ஆம் தேதி நடைபெறும்
முகாம்களுக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்று சொட்டு மருந்து
புகட்டுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்
No comments:
Post a Comment