ஷைகுல்மில்லத் இளைஞா் மன்றம் சீரத்கமிட்டி நடத்தும் இஸ்லாமிய மாணவ,மாணவியா்களுக்கான மார்க்க கல்வியின் கேள்வி பதில்
இதில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
லால்பேட்டை ஷைகுல்மில்லத் இளைஞா் மன்றம் சீரத்கமிட்டி நடத்தும் இஸ்லாமிய
மாணவ,மாணவியா்களுக்கான மார்க்க கல்வியின் கேள்வி பதில் சிறப்பு போட்டி
இன்று இரண்டாவது நாள் தொடர்ச்சியாக காலை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்
வளாகத்தில் ஜாமிஆ முதல்வர் மவுலவி ஏ. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்
தலைமையில் ஜாமிஆ பேராசிரியர்கள், முத்தவல்லி, ஜமாத்தார்கள்,
ஷைகுல்மில்லத் இளைஞா் மன்றம் சீரத்கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில்
நடைப்பெற்றது.இதில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
இதில் லால்பேட்டை இமாம் புஹாரி பிரைமரி பள்ளியில் ஐந்தாவது படிக்கும்
மாணவி மகாலட்சுமி இந்த இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் கலந்துக்கொண்டு
பரிசு பெறும் தகுதிக்கு தேர்வும் பெற்றுள்ளார் அல் ஹம்துலில்லாஹ்
Thanks_ lalpetexpress.com
No comments:
Post a Comment