அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, October 28, 2013

ராகுல் காந்தி உருவ பொம்மை எரித்து எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி உருவ பொம்மையை எரித்து, எஸ்.டி.பி.ஐயினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தரபிரதேசம் முஸாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புண்டு என்று கூறிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கையை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி வீட்டை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் மாறுபட்டதல்ல என்பதற்கான ஆதாரமே ராகுல் காந்தியின் அறிக்கை என்று எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் ஏ. ஸயீத் தெரிவித்திருந்தார். மேலும் ராகுலின் இந்த அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றதோடு ராகுலின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது

No comments:

Post a Comment

Photobucket