அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, October 28, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (28.10.2013) காலை 11 மணி அளவில் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாட்டை இந்தியா
தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி…

காமன்வெல்த்தின் அடிப்படை கொள்கைகளான அமைதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு எதிரான ராஜேபக்சே ஆளும் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடைபெற கூடாது என வலியுறுத்தினார். இது குறித்து தமிழக சட்டசபையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, தி.மு.க தலைவர் கலைஞர் அனுப்பியிருந்த கடிதத்திற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தமிழக மக்களின் உணர்வுகள் கருத்தில் கொள்ளப்படும் என அளித்த வாக்குறுதிக்கு விரோதமாக இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இலங்கை தூதர் இந்தியா காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் உலக நாடுகளில் இருந்து இந்தியா தனிமை படுத்தப்படும் என கூறியதற்கு அவர் மேல் இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆர்பாட்டத்திற்கு தலைமை ஏற்று பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய

தலைவர் A.சயீத், மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் மீதான இனவெறி தாக்குதல்களுக்காகவும் இலங்கை அரசு உலகின் கண்டன பார்வையில் உள்ளது. போர் குற்றங்களுக்கான விசாரணையை ஐ.நா வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் எதிர் நோக்கி உள்ள இலங்கையை காமன் வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முன் இது போன்ற காமன்வெல்த் தத்துவங்களை பின்பற்றாத பிஜி தீவுகள், தென் ஆப்ரிக்க மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நீக்கி வைக்கபட்டுள்ள முன் மாதிரிகள் உள்ளதை சுட்டி காட்டினார்.

ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் A.சயீத், தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, தேசிய துணை தலைவர் சாம் குட்டி ஜாகோப், தேசிய பொது செயலாளர்கள் அப்சர் பாஷா, அப்துல் மஜீத் பைசி, ராஜஸ்தான் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் விஜேந்திர கசனா மற்றும் தமிழ் மாநில பொது செயலாளர்கள் நெல்லை முபாரக், நிஜாம் முஹைதீன், அப்துல் ஹமீது ஆகியோருடன் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Photobucket