இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எஸ்.டி.பி.ஐ
கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பின்வருமாறு
குறிப்பிட்டுள்ளார்…
ஆயுள் தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதை பல்வேறு மாநில அரசுகளும் வழமையாக கொண்டுள்ளன. ஏதாவது முக்கிய தினங்களில் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இந்த அடிப்படையில் தமிழகத்தில் பலமுறை ஆயுள் சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். தங்களது அ.தி.மு.க ஆட்சியிலும் அவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலை பெற்றவர்கள் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள என்ற சர்ச்சை எங்கும் ஏற்படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த கோரிக்கையை தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். சிறைக்கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும், தாங்கள் கருணை கூர்ந்து இக்கோரிக்கையை ஏற்று ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலை செய்வீர்கள் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே கருணையுடன் இக்கோரிக்கையை பரிசீலித்து 7 வருடம் தண்டனை காலத்தை சிறையில் கழித்த ஆயுள் சிறைக்கைதிகளை ஜாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment