கடலூர், : கடலூரில் இலவச மருத்துவ காப்பீடு திட்ட அடையாளஅட்டை இல்லாத
பயனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் புகைப்படம் எடுத்து அடையாளஅட்டை வழங்கும்
பணியை ஆட்சியர் கிர்லோஷ்குமார் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். இந்த திட்டத்தில் 1016 வகையான உயர் சிகிச்சை முறைகளும், 23 வகையான நோய் பரிசோதனை முறைகளும் அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் இலங்கை அகதிகள், முன்னாள் கிராம முன்சீப்கள், பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள் உள்ளிட்டோர் அடையாளஅட்டை பெற தகுதியுடையவர்கள்.
கடலூர் மாவட்டத்தில் 20 மருத்துவமனைகளிலும் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று கொள்ளலாம். மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் பயன்பெறுவதற்கு புகைப்படம் எடுக்கப்பட்ட 4,99,123 மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அடை யாள அட்டை இல்லாத பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட கியாஸ்க் சென்டரில் ஆன்லைன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் மருத்துவ சிகிச்சை அடையாள அட்டை வழங்கப்படும்.
இத்திட்டம் பற்றிய மேலும் தகவல் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 18004253993 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இச் சேவையை தகுதி வாய்ந்த பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இதுவரை அடையாள அட்டை புகைப்படம் எடுத்த பின் குறிப்பிட்ட நாளுக்கு பிறகு தான் கிடைக்கும். தற்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் நேரடியாக எடுப்பதால் உடனடியாக பெறும் வசதி துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஜெயசந்திரன், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் மணிவண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment