SDPI கட்சியின் மாநில தலைவர் கே கே எஸ் எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வாகன
விபத்துகளால் உயிர் இழப்பும் பொருட்சேதமும் அதிகரித்து வருகிறது.
இவற்றில் பெரும்பாலான
விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் மது
அருந்திவிட்டு ஓட்டுவதே முதன்மையான காரணம் என்பதாலும் நெடுஞ்சாலை ஓரங்களில்
உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில்
சென்னை உயர் நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மார்ச்
31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது
.
மேற்படி உயர் நீதிமன்ற
உத்தரவை அமுல்படுத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 டாஸ்மாக்
மதுபானக்கடைகளை அகற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்தபோதும் தமிழக
அரசு நிறுவனமான டாஸ்மாக் மக்கள் நலனில் அக்கறையின்றி தன் வருமானத்திலேயே
குறியாக இருப்பதால் இன்றளவும் நூற்றுக்கும் அதிகமான மதுபானக்கடைகள் தேசிய
நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. பல கடைகள் முன் பகுதியை
மூடிவிட்டு பின் பகுதியில் பாதையை ஏற்படுத்தி செயல்படுகின்றன.
அதோடு அகற்றப்படும்
மதுபானக்கடைகள் மாற்று இடத்தில் செயல்படவேண்டும் என்ற குறிக்கோளுடன்
டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவதால் பெரும்பாலும் குடியிருப்புகள், பள்ளிகள்,
கல்லூரிகள் , பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்கள்
ஆகியவற்றின் அருகில் அவசர கோலத்தில் திறக்கப்படுகின்றன. இதனால் பல
பகுதியில் மக்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை முழுமையாக அகற்றுவதோடு அகற்றப்பட்ட
கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்…
No comments:
Post a Comment