அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, April 3, 2013

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியல்

காட்டுமன்னார்கோவில். : காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் கிராமம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கிராமத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. உயர்நீதி மன்றம் நெடுஞ்
சாலையோரம் செயல்படும் மதுபான கடைகளால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது என்பதால் நெடுஞ்சாலை ஓரங்களில் செயல் படும் கடைகளை
அப்புறப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலையோரத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

ஆனால் காட்டுமன்னார்கோவில் அருகே
பழஞ்சநல்லூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் குணசேகரன், மாநில வன்னியர் சங்க முன்னாள் துணை தலைவர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் நேற்று டாஸ்மாக் கடையின் முன்பு திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காட்டுமன்னார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென ஆவேசமடைந்த பெண்கள் சப்-இன்ஸ்பெக்டரை
முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, தாசில்தார் தில்லைகோவிந்தன் ஆகி யோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் மறியலை கைவிட்ட பெண்கள் மது பான கடையை திறக்க விடாமல் கடையை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி ஒரு மாதத்தில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

ஆனால் 10 தினங்களுக்குள் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். பொது மக் களின் வேண்டுகோளுக்கு இணங்க 15 நாட்களில் கடை அப்புறப்படுத்தப் படும் என அதிகாரிகள் உறுதி கூறினர்.
அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென் றனர். இதனால் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கு
வரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Photobucket