அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, April 1, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைப்பு வரவேற்கத்தக்கது

SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே. எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் உருட்டு ஆளை சுற்று சூழலை மாசுபடுத்த கூடியது .தூத்துக்குடியை சுற்றி வாழும் லட்சக்கணகான மக்களை பலவிதங்களில் பாதிக்க கூடியதும் இதன் மூலம் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் விவசாய விலை
நிலங்கள் அழியும் ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது.பல்வேறு மாநிலங்களில் இருந்து துரத்தப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை பணிகள் துவங்கிய முதல் இந்த ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராடி வருகின்றனர்,வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த வாரம் ஸ்டெர்லைட் ஆலைக்குள் கசிந்த விஷவாயுவால் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மயக்கமும்,எரிச்சலும் ஏற்ப்பட்டது. இதை தொடார்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது.பல்வேறு தலைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

SDPI கட்சியும் இந்த போராட்டத்தை வலுசேர்க்கும் விதமாக எனது தலைமையில் வரும் 2 ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவித்து அதற்காக மக்களை திரட்டும் பணியும் நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அளித்த அறிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைக்க உத்தரவிட்டார்.இதை SDPI கட்சி வரவேற்று உள்ளது.அதே சமயம் இந்த தடையை தங்களது மக்களை காப்பாற்ற நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என SDPI கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Photobucket