ரியாத்: ஸ்கைப் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற அப்ளிகேஷன்கள் சவூதி அரேபிய
சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசு தொலைத்தொடர்பு
ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்டர்நெட் மூலம் பிரியமானவர்களுடன் பேச உதவும் ஸ்கைப், எஸ்.எம்.எஸ்.
அனுப்ப உதவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட அப்ளிகேஷன்கள் சவூதி அரேபிய
விதிமுறைகளுக்குட்பட்டு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து
இந்த வசதிகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றை கண்காணிக்க
வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்று சவூதி அரசு உத்தரவிட்டதாக கடந்த
வாரம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப
ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்டர்நெட் உதவியுடன்
பயன்படுத்தப்படும் சில அப்ளிகேஷன்கள் உள்நாட்டு விதிகளை மீறியுள்ளன என்பது
தெளிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. விதிகளை மீறியவைகள் பட்டியலில்
ஸ்கைப், வைபர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளின் பெயர்கள் உள்ளன.
இதையடுத்து ஸ்கைப், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சேவகளை வழங்கும் தொலைத்தொடர்பு
ஆபரேட்டர்கள் அவை சவூதி விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை கவனிக்க
வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சவூதியின் 3 முக்கிய மொபைல் ஆபரேட்டர்களான சவூதி டெலிகாம் நிறுவனம்,
எதிஹாட் எடிசலாட் மற்றும் ஜயின் சவூதி ஆகியவை இது குறித்து எதுவும்
உடனடியாக தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment