ஈரானின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம்
புஷேர் நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே இன்று மாலை 6.3
ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10
கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரமான புஷேரில் இருந்து 60
மைல்கள் தெற்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அப்போது 6.1
ரிக்டர் ஆக பதிவானதாகவும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈரான் நில
அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரான் மட்டுமின்றி, துபாய், ஷார்ஜா மற்றும்
பிற அமீரக நாடுகள் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம்
ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி திறந்த
வெளிக்கு வந்தனர்.
துபாய் மெரினா பகுதியில் உள்ள கட்டிடங்கள்
காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மனாமாவில் உள்ள
முக்கியமான அலுவலகங்களில் உள்ள ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment