காட்டுமன்னார்கோவில்,: காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியின் மேற்கரையில்
மணவெளி கிராமத் தில் இணைப்பு சாலையை சீர்செய்ய பொது மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
மணவெளி பகுதி மக்கள் வீராணம் ஏரியின் கரை வழியாக அகரபுத்தூர்,
சித்தமல்லி சென்று வருகின்றனர். பல்வேறு பொருள்கள் வாங்க செங்கால் ஓடையை கடந்து ஏரிகரை வழியாக கிராமத்திற்குள் செல்கின்றனர். அகரபுத்தூர் கிராமத்தில் ஏரிகரையையும் கிராமத்தையும் இணைக்கும் சாலை சரியில்லாததால் பொது மக்கள் நடந்து கூட செல்ல இயலவில்லை. மேடும் பள்ளமுமாக காணப்படுவதால் இரு சக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. மழை காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கும். இதன் காரணமாக மணவெளி கிராமம் அகரபுத்தூர் கிராமத்திலிருந்து துண்டிக்கப்பட்டு காணப் படும். ஆகவே மாவட்ட நிர்வாகம் மணவெளி, அகரபுத்தூர் இணைப்பு சாலையை சீர்செய்ய வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:
Post a Comment