அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, March 14, 2013

எம்ஆர்கே பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

காட்டுமன்னார்கோவில், :  காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்ஆர்கே பாலிடெக்னிக் கல்லூரியில் கிராம புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி இறுதி ஆண்டு மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து  கேம்பஸ் இன்டர்வியூ நடக்கிறது. இதன்படி சென்னையை சேர்ந்த ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.
   நிறுவனத்தின் மேலாளர் ராஜா, மனித வள அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் நேர்காணல் செய்தனர். இதில் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் ஆகிய துறைகளை சார்ந்த இறுதி ஆண்டு படிக்கும் 37 மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இதில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை கல்லூரி சேர்மன் கதிரவன் வழங்கினார்.

  இத்துறைகளில் உள்ள 126 மாணவர்களில் 83 மாணவர்கள் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொண்டு பணி நியமனம் ஆணையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Photobucket