ஹைதராபாத்:2007-ஆம்
ஆண்டு மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது
செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரியிடம் 3-வது
நாளாக தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியது.
குண்டுவெடிப்பு
வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரியை
15 நாட்கள் என்.ஐ.ஏ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மக்கா
மஸ்ஜித் குண்டுவெடிப்பில் குண்டு வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த
ஹரியானாவில் இருந்து சவுத்ரி விசாரணைக்காக ஹைதராபாத் கொண்டுவரப்பாட்டான்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வழக்கிலும் குற்றவாளியான சவுத்ரியை கடந்த டிசம்பர்
மாதம் உஜ்ஜையினில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்தது.
No comments:
Post a Comment