காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் அனைத்து
கிராமங்களிலும் அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் மயான கொட்டகைகள் புதியதாக
கட்டப்பட்டு வருகிறது. இதில் சூரிய ஒளியின் மூலம் எரியும் மின்விளக்குகள்
ரூ. 25 ஆயிரம் மதிப்பில் பேட்டரியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாகவும், இன்வெட்டருக்கு பயன்படும்
பேட்டரிகளின் தட்டுப்பாடாலும் மயானத்தில்
பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளை
மர்மநபர்கள் சிலர் திருடி செல்கின்றனர். இங்கு திருடப்படும் பேட்டரிகள்
வெளியில் நல்ல விலைக்கு விற்பதாக தெரிகிறது. இந்த பகுதிக்கு உட்பட்ட
கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு, தொரப்பு, பெரியபுங்கநதி என 15க்கும்
மேற்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்ட பேட்டரிகள் திருடுபோயுள்ளது
தெரியவந்தது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Saturday, March 16, 2013
காட்டுமன்னார்கோவில் அருகே மயானங்களில் பேட்டரி திருட்டை தடுக்க வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment