அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, March 18, 2013

1,70,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க சவூதி அரேபியா அரசு முடிவு

ஜித்தா:இந்த ஆண்டு-2013 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவைச் சார்ந்த 1, 70,000 பயணிகளுக்கு அனுமதி வழங்க சவூதி அரேபியா அரசு முடிவுச் செய்துள்ளது.
இதுக் குறித்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம்
கூறியது: மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அஹ்மது, சவூதி அரேபியாவின் ஹஜ் பயணத்துக்கான அமைச்சர் முஹம்மது அல் ஹஜ்ஜாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஹஜ் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  ஹஜ் பயணிகளிடமிருந்து அதிகப்படியான விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதால் கூடுதலாக 10,000 பேருக்கு அனுமதி வழங்க வேண்டும் என அஹ்மது கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சவூதிக்கான இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் மற்றும் துணைத் தூதரக அதிகாரி ஃபயாஸ் அஹ்மது கித்வாய் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Photobucket