அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, December 2, 2012

லால்பேட்டையில் 144 தடை உத்தரவு


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் – லால்பேட்டை அருகே உள்ள இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் …
ரம்ஜான் தைக்கால் பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகே மது குடித்துக்கொண்டிருந்தனர், இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் கண்டித்தனர், இதனால் இருதயபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோபம் அடைந்து ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம், சலீம் ஆகியோரைத் கடுமையாக தாக்கி சலீமின் டீக்கடையையும் அவர்கள் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்,இதைத்தொடர்ந்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருதயபுரத்திற்குத் திரண்டு சென்றனர், தகவல் அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்,

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட இருதயபுரத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யக்கோரி தைக்கால் பகுதி இளைஞர்கள் 1/2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர், காவல்துறையினர் லேசாக தடியடி நடத்தி அவர்களைக் கலைந்து போகச்செய்தனர்,

இது சம்மந்தமாக இருதயபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜா என்பவர், மெஹ்ராஜ்தீன் உட்பட 100 பேர் வீடு புகுந்து தாக்கியதாகவும், வீடுகளைச் சேதப்படுத்தியதாகவும், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் மற்றொரு தரப்பைச் சேர்ந்த அக்பர் ஷரீப் மகன் முகமது ஷரீப், இருதயபுரத்தைச் சேர்ந்த ராஜா, பிரவின், நேசன், உட்பட 50க்கும் மேற்பட்டோர் ரம்ஜான் தைக்கால் உள்ளே புகுந்து தாக்கியதாக புகார் கொடுத்தார்,

இரு தரப்பினரின் புகாரின் மீதும் காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் கலவரம் ஏற்பட்ட இருதயபுரம், ரம்ஜான் தைக்கால் பகுதியில் காவல்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்,

மேலும் மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையினைக் கருத்தில் கொண்டு மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலித் மக்கள் அதிக அளவில் இருக்கும் காட்டுமன்னார் கோவில் பகுதியிலும், ரம்ஜான் தைக்கால் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் லால்பேட்டை பகுதியிலும் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
இப்பகுதியில் நான்கு நபர்களுக்கு பேருக்கு மேல் கூடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 .lalpetexpress.com THANKS

No comments:

Post a Comment

Photobucket