புதுடெல்லி:மகளிருக்கு
எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்
என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை மோடி ஆளும் குஜராத்
பிடித்துள்ளது. ஒரு பெண் முதல்வராக உள்ள தமிழகத்தில் மகளிருக்கு
எதிரான
குற்றங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்களவையில்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல
மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா தீரத் கூறியது: தேசிய குற்றப் பதிவேடு
ஆணையகத்தின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் 2011ஆம் ஆண்டு பெண்களுக்கு
எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 9,431 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில்,
தமிழகத்தில் மட்டும் அதிகளவாக 3,983 வழக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில்
3,266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1,661 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
பள்ளி
மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, 36
புகார்களை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.
இவற்றில், 21 சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றவை என்றார் அவர்.
No comments:
Post a Comment