அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, November 13, 2014

பாபர் மசூதி இருந்த இடத்தை பார்வையிட சிபிஐ நீதிபதிக்கு அனுமதி மறுப்பு

ஃபைசாபாத்: பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிடுவதற்கு ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டம், அயோத்தியில் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும்
இடத்தில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை ஃபைசாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக சிபிஐ அதிகாரிகள் குழு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அரசுத்தரப்பின் வழக்கறிஞர்கள் ஆகியோருடன் பாபர் மசூதி அமைந்திருந்த பகுதிக்கு வரும் 15ந் தேதி செல்ல சிறப்பு நீதிபதி எஸ்.எம்.திவாரி முடிவு செய்தார்.

ஆனால் சிறப்பு நீதிபதி உள்ளிட்டோர் அங்கு செல்வதற்கு ஃபைசாபாத் மாவட்ட வட்டாட்சி ஆணையர் விஷால் சௌஹான் அனுமதி வழங்க மறுத்து விட்டார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் பூசாரியைத் தவிர யாரையும் அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket