சென்னை சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பு மற்றும் அஸ்ஸாமில் முஸ்லிம்கள்
படுகொலையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (17-05-2014) சென்னை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை
நடத்தியது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர்
முகம்மது நாஜிம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர்
ஹம்சா, ரத்தினம் வடசென்னை மாவட்ட தலைவர் ரஷீத், தென்சென்னை மாவட்ட தலைவர்
நேதாஜி ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பேசுகையில்;
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பெங்களூரு-கவுகாத்தி
எக்ஸ்பிரஸ் இரயிலில் கடந்த மே 01 அன்று குண்டுவெடித்து இளம்பெண் ஒருவர்
பலியானார். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கக்
கூடியது, கடும் கண்டனத்திற்குரியது.
அமைதியாக உள்ள தமிழகத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த
குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் அமைதியை
சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட இதுபோன்ற பயங்கரவாத வன்முறைகளை
ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது. இந்த குண்டுவெடிப்பு எந்த காரணத்திற்காக
நடத்தப்பட்டாலும் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் சிபிசிஐடி, உண்மையான
குற்றவாளிகளை விசாரித்து கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கு
தண்டனை பெற்றுத்தர வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை
வழங்கவேண்டும். தேசிய புலனாய்வுத் துறையும் இதுகுறித்து விசாரணையை நடத்த
வேண்டும்.
ஆனால் விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே குறிப்பிட்ட சமூகத்தை
சேர்ந்தவர்கள் மீது பழியை சுமத்தாமல், நேர்மையான விசாரணையை
மேற்க்கொள்ளவேண்டும். மேலும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில்
உள்ளவர்களையும் மிக விரைவாக கண்டுபிடித்து விரைவாக தண்டனை வழங்க வேண்டும்
என்றும் கேட்டுக்கொண்டார்.
அஸ்ஸாமில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக போடோ தீவிரவாதிகள் நடத்திய
கலவரத் தாக்குதலில் 45 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். தேர்தல் பிரச்சாரப்
பொதுக்கூட்டத்தில் ஆற்றிய துவேச உரையும் கலவரம் உருவாக காரணம் என்று உண்மை
அறியும் குழுவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செண்டர் ஃபார் பாலிசி அனாலிசிஸ் (சி.பி.எ) என்ற அமைப்பு அஸ்ஸாம் கலவரம்
குறித்து ஆய்வு மேற்கொண்டது. அவ்வமைப்பின் ஆய்வு அறிக்கையில்; அஸ்ஸாமில் இன
அழிவை சந்திக்கும் காண்டாமிருகங்கள் அழிப்பு பின்ணணியில் ஓட்டுக்காக
வங்கதேச முஸ்லிம்களின் குடியேற்றம் உள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் மோடி
பேசியதும், அஸ்ஸாமில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு
ஏப்ரல் 30-ஆம் தேதி போடோலாண்ட் பொலிடிக்கல் ஃப்ரண்டின்(பி.பி.எஃப்)
எம்.எல்.ஏ பிரமீளா ராணி வெளியிட்ட கருத்து கொந்தளிப்பதை ஏற்படுத்தியது.
போடோலண்ட் டெரிட்டோரியல் சுய ஆட்சி மாவட்டங்களில் முஸ்லிம்கள்
வாக்களிக்காததால் இம்முறை பி.பி.எஃப் வெற்றிபெறுவது சிரமம் என்று பிரமீளா
ராணி தெரிவித்திருந்தார். கலவரத்தில் போடோக்களின் தீவிரவாத அமைப்பான தேசிய
ஜனநாயக போடோலாண்ட் முன்னணியின்
(என்.டி.எஃப்.பி) உறுப்பினர்களும்
பங்கேற்றனர் என்பது பாதிக்கப்பட்டவர்களை மேற்கோள்காட்டி அறிக்கை
சுட்டிக்காட்டுகிறது.
போடோலண்ட் டெரிட்டோரியல் சுய ஆட்சி மாவட்டங்களில் வன பாதுகாவலர்களாக
நியமிக்கப்பட்டவர்கள்தாம் என்.டி.எஃப்.பி உறுப்பினர்கள். இறந்தவர்களின்
உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் வன பாதுகாவலர்களின் அதிகாரப்பூர்வ
ரைஃபிள்கள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளில் உள்ளவை என்று பாதுகாப்புப்
படையினர் உறுதிச் செய்துள்ளனர்.
ஆகவே கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும், மறுவாழ்வும்
உறுதிச் செய்யவேண்டும் மேலும் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும்
என்றும் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இறுதியாக வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எ.கே.கரீம் நன்றியுரையாற்றினர்.
No comments:
Post a Comment