அஸ்ஸலாமு அலைக்கும் **

Tuesday, November 5, 2013

மிகமோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சிதம்பரம் நகரில் காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து மழைநீர் குட்டை போல் தேங்கி மிகமோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.


 சிதம்பரம் நகரில் காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையான மன்னார்குடித் தெரு சாலை குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கி மிக மோசமாக உள்ளது. இச்சாலை காட்டுமன்னார்கோவில், திருச்சியிலிருந்து சிதம்பரம் வரும் பேருந்துகள் பஸ் நிலையத்துக்குச் செல்லும் ஒருவழிப்பாதை சாலையாகும். அதிகமான வாகனங்கள் இத்தெருவில் செல்வதால் சாலையில் கற்கள் பெயர்ந்தும், மழைநீர் தேங்கியும் குட்டைகளாக காட்சியளிக்கின்றன. இதனால் அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 பேருந்துகள் செல்லும்போது சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது தேங்கியுள்ள நீர் வாரி இறைக்கப்படுகிறது. இதே போன்று வேணுகோபால் தெரு, போல்நாராயணன் தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு, தேரடி பிள்ளையார் கோயில் தெரு ஆகிய சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. எனவே இச்சாலைகளைச் சீரமைத்து புதிதாக தார்ச் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Photobucket