அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, November 9, 2013

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி 12ஆம் தேதி முழு வேலைநிறுத்தம்! அனைவரும் ஆதரிக்க வேண்டும்!! எஸ்.டி.பி.ஐ கட்சி வேண்டுகோள்.

 இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில்…..
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தது இலங்கை அரசு.
பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகளை கொத்து கொத்தாய் படுகொலை செய்தது இலங்கை ராணுவம். சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கை அரசின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட பாலச்சந்திரனின் படங்கள் மற்றும் இசைப்பிரியாவின் வீடியோ காட்சிகளும் சாட்சியங்களாக உள்ளன.

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை போன்ற எந்த நாடுகளையும் மனசாட்சி உள்ளவர்களால் மன்னிக்க முடியாது. ஆனால் இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதற்கு பதில் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்தி ராஜபக்சேவிற்கு மகுடம் சூட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக சடடமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஒரு பொருட்டாக கருதாமல் மாநாட்டை புறக்கணிக்க தயங்கும் மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டித்தக்கது. இந்த தருணத்தில் தமிழர்களிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மாச்சர்யங்களையும் மறந்து நமது ஒற்றுமையை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் நமது கண்டனத்தை தெரிவிக்கும் பொருட்டு 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலைநிறுத்ததிற்கு எஸ்.டி.பிஐ கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. அதிமுக, திமுக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை அளித்து இப்போராட்டம் வெற்றியடையச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Photobucket