கடலூர் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை அருகே இன்று
கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடலூர் துறைமுகத்தில் நேற்று
மாலை 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
கடலோர பகுதிகளில் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து இருந்தது. இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் கடந்த 13–ந்தேதி 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
3–ம் எண் கூண்டு
இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது நாளை காலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், அதிகப்பட்சமாக 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது உள்ளூருக்கு பாதிப்பு இருப்பதை உணர்த்துவதற்காக 3–ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, அது நாளை அல்லது நாளை மறுநாள் (அதாவது இன்று அல்லது நாளை) நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். அப்போது காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
கடல் சீற்றம்
இதற்கிடையே கடலூரில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் இருந்து வந்த
நிலையில், நேற்று சற்று அதிகமாக சீற்றம் இருந்தது. கடலில் அலைகள் சுமார் 4
அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி
கடற்கரையில் நேற்று மாலை நின்றவர்களை போலீசார் அங்கிருந்து செல்லுமாறு
கேட்டுக்கொண்டனர்
No comments:
Post a Comment