மக்களுக்கு அரசு வழங்கும் இலவச பொருட்களை லஞ்சமாக கருத முடியாது" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களை லஞ்சமாக அறிவிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணிய
பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கூறியிருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கொண்ட அமர்வு, தேர்தல் வாக்குறுதிப்படி இலவச பொருட்கள் தருவது லஞ்சமாக கருத முடியாது என்று கூறியுள்ளனர்.
மேலும், இலவச திட்டங்கள் குறித்து வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்திய நீதிபதிகள், இலவசம் தொடர்பாக குழு ஒன்றை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment