கண்ணூர்(கேரளா):கேரள மாநிலம் கண்ணூர்
மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறி
கைதுச் செய்ததுடன்,
அங்குள்ள கட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறி நாட்டு
வெடிக்குண்டுகளையும், வாட்களையும் செட்டப் செய்து ஊடகங்களுக்கு காட்சிக்கு
வைத்தது கேரள போலீஸ்.
பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கட்டிடப்
பணி நடந்துகொண்டிருந்த கட்டிடத்தில் கைதுச் செய்யப்பட்ட இளைஞர்கள் மீது
போலீஸ் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் அப்ரூவர்களை
உருவாக்க கேரள போலீஸ் முயற்சியை துவக்கியுள்ளது.குஜராத் போன்ற சில
மாநிலங்களில் அப்ரூவர்களை உருவாக்கும் அதே மாடலை கேரள போலீஸும் பின்பற்ற
துவங்கியுள்ளது.
இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள்
அப்ரூவர்களை உருவாக்கும் எண்ணத்துடன் வழக்கில் கைதுச் செய்யப்பட்ட
நபர்களின் உறவினர்களை அணுகியதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.ரெய்டின் போது
கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் கூறும் ஆவணங்களை வீடுகளில் பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தது என்று கூறி பேப்பரில் கையெழுத்திடுமாறு மஃப்டியில்
வந்த போலீஸ் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம்
வலியுறுத்தியுள்ளனர்.மேலும் போலீஸ் இவர்களின் வீடுகளுக்குச் சென்று
தொடர்ந்து தொந்தரவு அளிப்பதாகவும், வழக்குகளில் சிக்கவைத்துவிடுவோம் என்று
மிரட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்துல் நாஸர் மஃதனி மற்றும் தடியண்ட விட
நஸீரைப் போல வாழ்க்கை முழுவதும் சிறையில் அடைக்கப்படுவதற்கு பதிலாக
அப்ரூவராக மாறி சிறிய தண்டனையை பெற்று விடுதலையாவதே நல்லது என்று போலீஸ்,
கைதுச் செய்யப்பட்ட நபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம்
தெரிவித்துள்ளது. இதற்காக மாவட்ட போலீஸில் ஸ்பெஷல் பிரிவில் சில
அதிகாரிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.கைதுச் செய்யப்பட்ட உறவினரை
வழக்கில் இருந்து விடுவிப்போம் என்றும், அதற்கு சில வெற்றுத்தாள்களில்
கையெழுத்திட்டால் போலீஸ் தொந்தரவுச் செய்யாது என்றும் வாக்குறுதி
அளித்துள்ளனர்.
மத்திய- மாநில உள்துறையில் சங்க்பரிவார தொடர்புடைய சில அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளனர்.
No comments:
Post a Comment