SDPI கட்சியன் தேசிய பொதுக்குழு கூட்டம்
கோவையில் இன்று(30.03.2013) காலை 11 மணியளவில் துவங்கியது.இரண்டு நாட்கள்
நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் துவக்கமாக காலை 11 மணிக்கு கொடியேற்று
நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுக்குழு நடைபெறும் கோவை ஆயிஷா
மஹால் அரங்கத்தின் முன்பு நடைபெற்ற இந்த கொடியேற்று நிகழ்ச்சியில்
கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தேசிய பொதுக்குழு
உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக
குழுமினர்.
சரியாக 11 மணியளவில் தேசிய தலைவர் E
அபூபக்கர் அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது கூடியிருந்தவர்கள்
உணர்ச்சி பொங்க SDPI ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து
பொதுக்குழு கூட்டம் துவங்கியது.
துவக்கமாக தேசிய பொது செயலாளர் முஹைதீன்
குட்டி பைஜி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அதை தொடர்ந்து தேசிய தலைவர் E
அபூபக்கர் அவர்கள் தனது தலைமை உரையை நிகழ்த்தினார், அதில் அவர் பேசும்
போது கட்சி துவங்கிய காலகட்டம் , கட்சியின் கடந்த கால செயல்பாடுகள்,
வளர்ச்சிகள் வரும் காலங்களில் நாம் செயல்பட வேண்டிய விதம் ஆகியவற்றை
குறித்து உரையாற்றினார்.
இதை தொடந்து கடந்த இரண்டு வருடகால செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை தேசிய
பொது செயலாளர் A செய்யது அவர்கள் வாசித்தார். அதை தொடர்ந்து அது தொடர்பான
விவாதங்கள் நடைபெற உள்ளன. கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் பற்றியும்,
வளர்ச்சி பற்றிய விவாதங்களும் நடைபெறும். தொடர்ந்து கட்சியின் புதிய தேசிய
நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment