ஐ.நா:மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில்
புத்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து புலன்பெயர்ந்த ரோஹிங்கியா
முஸ்லிம்கள் அசுத்தமான பகுதியில் வாழ்கின்றனர். இப்பகுதியில் மழை
அதிகரித்தால் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்று ஐ.நா
எச்சரித்துள்ளது.
புத்த தீவிரவாதிகளின் தாக்குதலில் வீடுகளை
இழந்த, தாக்குதலுக்கு அஞ்சி
புலன்பெயர்ந்த 1.25 லட்சம் ரோஹிங்கியா
முஸ்லிம்கள் முற்றிலும் அசுத்தமான சூழலைக் கொண்ட முகாம்களில் வசித்து
வருகின்றனர். மழைக்காலம் இவர்களின் மோசமான நிலையை மேலும் இரட்டிப்பாக்கும்.
மிகப்பெரிய துயரம் நிகழும் முன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நாவின் மனிதநேய விவகாரங்களுக்கு பொறுப்பில் உள்ள
ஜோன் ஜிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் மே மாதம் மழைக்காலம்
துவங்கும். இதற்கு முன்னோடியாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு புதிய இடம்
வழங்கவும், இரு சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கவும் மியான்மர்
அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்தில் அரசு தாமதம்
காட்டக்கூடாது என்று ஜோன் ஜிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment