இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறலை
கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)
கட்சியின் சார்பாக திருச்சி புத்தாநத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு
வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சர்வதேச போர்குற்றவாளி என்று
ராஜபக்சேயை
அறிவிக்க வேண்டும், இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் பொது
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், என்று வலியுறுத்தியும்,இலங்கையில்
ஏற்பட்ட மனித உரிமை மீறலை கண்டித்தும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப்
இந்தியா எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக திருச்சி புத்தாநத்தத்தில் இன்று
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின்
உருவபொம்மை எரிக்கப்பட்டது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்
முகமது ரபிக் தலைமை தாங்கினார்.கேம்பஸ் பிரன்ட் ஆஃப் இந்தியா மாநில
செயற்குழு உறுப்பினர் சுபுஹதுல்லாஹ் கண்டன உரையாற்றினார்.இதில் கட்சியின்
செயல் வீரர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment