SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை
கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் சம்பந்தமாக தி .மு .க வின்
கோரிக்கை எற்ப்படாததையும் இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதையும்
கண்டித்து தி.மு.க ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசிற்கு தனது ஆதரவை திரும்ப
பெற்ற இரண்டாவது நாளே தி.மு.க பொருளாளர் மு .க .ஸ்டாலின் வீடு உட்பட
தி.மு.க வினருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் CBI சோதனை மேற்கொண்டுள்ளது
.இது மோசமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையேயாகும் .
CBI யை மத்திய அரசு தனது கைப்பாவையாக
நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை மக்களுக்கு முன்பு மிக தெளிவாக இது
நிருபித்துள்ளது. 9 வருட காலம் தனது அரசின் நம்பத்தக்க கூட்டாளியாக இருந்த
தி.மு.க வெளியேறிய இரண்டாவது நாளே பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
காங்கிரஸின் மோசமான் அரசியல் நாகரிகத்தையை வெளிப்படுத்துகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய
அரசிலிருந்து தி.மு.க வெளியேறியதை உலக தமிழ் மக்கள் வரவேற்கும் நிலையில்
மத்திய அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு மக்கள் பதிலடி தருவார்கள்
என்பதில் ஐயம்மில்லை.
மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு
எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி விவாதிக்க புது
தில்லியில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா உட்பட
பல்வேறு கட்சிகள் இலங்கைக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டுள்ளன .இது வன்மையாக
கண்டிக்கத்தக்கது .இதை தான் காங்கிரசும் எதிர்பார்த்திருக்கும்.பாரதிய
ஜனதாவின் உண்மை முகத்தை தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டு
கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் ..
No comments:
Post a Comment