அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, January 20, 2013

கால்நடை மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு

 காட்டுமன்னார்கோவிலில் கால்நடை மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுபவர் அப்துல்ரகீம். சில தினங்களுக்கு முன்பு, இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ரேணுகாவின் கணவரும், அதிமுக பிரமுகருமான அசோகன் கீழக்கடம்பூரில், "என்னை அழைக்காமல் இலவச ஆடுகளை ஏன் வழங்கினாய்?' என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யாமல் மருத்துவரை போலீஸார் அலைகழித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்தார்.இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் போலீஸார் அசோகன் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்

No comments:

Post a Comment

Photobucket