புதுடெல்லி: மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒரு எரிவாயு இணைப்புக்கு ஆண்டுக்கு 6
சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்ற திட்டத்திற்கு
மக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற மத்திய
அமைச்சரவை கூட்டத்தில், ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் அளிக்க
முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், இந்த உயர்வு வரும் ஏப்ரல்
மாதத்தில் இருந்துதான் அமலுக்கு வர உள்ளது. மேலும் பெட்ரோலுக்கு அனுமதி
அளிக்கப்பட்டது போன்று, டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே முடிவு
செய்துகொள்ளவும் மத்திய அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது. இத்தகவலை
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
No comments:
Post a Comment