புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு பெங்களூரில்
நடந்த ‘எம்பவர் இந்தியா’ மாநாட்டில் கேரளாவில் இயங்கிய என்.டி.எஃபும்,
தமிழ்நாட்டின் எம்.என்.பியும், கர்நாடகாவின் கே.எஃப்.டியும் இணந்து
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற நவீன சமூக இயக்கம் உருவானது.
இந்நாளை
இவ்வாண்டிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாடப்படும் என்று
அவ்வமைப்பின் தேசிய செயற் குழு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் யூனிட் அளவில் கொடி ஏற்றல்
நிகழ்ச்சிகளும், மாவட்ட அளவில் யூனிட்டி மார்ச் என்ற பெயரில் பேரணியும்
பொதுக்கூட்டமும் நடைபெறும். வரும் ஆண்டுகளிலும் இதே போன்ற நிகழ்ச்சிகள்
தொடரும்.
தேசிய அளவில் இயக்கம் அறிவிக்கப்பட்ட
பிறகு கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கால்பதித்துள்ளது. சமூக நீதிக்கான ஒரு வரலாற்று
நிகழ்வாக கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த சமூக
நீதி மாநாடு அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் சக்திப்படுத்தலுக்காக
பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா நடத்தி வரும் போராட்டங்களும், சேவைகளும்
பெரும் மக்கள்ஆதரவை பெற்றுள்ளன.
“Together for People’s Rights” (மக்களின்
உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்) என்பதே இவ்வாண்டிற்கான பாப்புலர் ஃப்ரண்டின்
முழக்கமாகும். நோட்டீஸ், சுவரொட்டிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றின்
மூலமாக இந்த செய்தி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.
மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நவீன-தாராளமய பொருளாதார கொள்கையும், நமது உள்நாட்டு விவகாரங்களில் நவீன காலனி ஆதிக்க சக்திகளின் தலையீடும் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை கூட ஆபத்தில் சிக்கவைத்துள்ளது. வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் குறித்து பெருமை பேசும் வேளையில் அடிப்படை வசதிகளுக்கு கூட மக்கள் ஏகபோக குத்தகைகளின் கருணையை எதிர்பார்க்கும் நிலை உள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசு
தயாராக்கும் சிறிய திட்டங்களின் பலனை கூட இடைத்தரகர்களான அரசியல்வாதிகள்
தட்டிப் பறிக்கின்றனர். கவலைக்குரிய இத்தகைய சூழலில் மக்களின் உரிமைகளை
மீண்டும் நிலைநாட்ட ஜனநாயகரீதியாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்திவரும்
இயக்கங்கள் தங்களிடையே விசாலமான ஐக்கியத்தை கட்டியெழுப்பி ஒரு
தேசியஇயக்கத்தை வழிநடத்துவது அத்தியாவசியமாகும்.
No comments:
Post a Comment