அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, November 28, 2012

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அபுதாகிரை உடனே விடுதலை செய்யகோரி அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டம்

கோவை மத்திய சிறையில் சுமார் பதினைந்தாண்டுகாலத்திர்க்கும் மேலாக சிறைபட்டுள்ள சிறைவாசி அபுதாகிர் அவர்கள் இவர் எஸ்.எல்.இ. என்கிற வியாதிக்கு ஆளாகி தனது வாழ்நாளின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறார் காரணம்
இவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன.நடக்கும் சக்தியையும் இவரது கால்கள் இழந்து வருகிறது.
கண் பார்வை பெரும்பான்மையாக குறைந்துவிட்டது.அபுதாகிரை பெயிலில் விடசொல்லி உயர்நீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே உத்தரவு  பிறப்பித்துள்ளது ஆனால் சிறை நிர்வாகம் அந்த நோயாளியை குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட இல்லாமல் பெயிலில் விட
மறுத்து வருகிறது.

தனது இறுதி நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் அபுதாகிரால் என்ன கேடு விளைந்துவிடபோகிறது...? குற்றவாளியும் ஒரு மனிதன்தானே அபுதாகிர் குற்றம் சாட்டபட்டவன்தானே... இதே நிலை வேறு எந்த சமுதாயத்தை சார்ந்தவருக்காகவது நிகழுமா...? அப்படியே நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட சமுதாயம் அமைதிகாக்குமா...? இதோ அந்த பரிதாபத்திற்குரிய சகோதரன் அபுதாகிர் மிக மோசமாக பாதிக்கப்பட்ட உடல் நிலையுடன் மருத்துவமனையில் சிறைதுறையால் அனுமதிக்கப்பட்டுள்ளான்... அவனுக்கு இரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இருப்பினும் அவனது உடல் நிலை அபாயகட்டத்தை தாண்டவில்லை... இந்த கொடுமையான சூழ்நிலையை கவனத்தில்கொண்டு நேற்றைய தினம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் கோவையில் ஒன்று கூடி அபுதாகிரின் விடுதலைக்காக தொடர்போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்...


ஆம் நாம் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் நம்மால் அதைதானே செய்யமுடியும்.!!! ஆனால் அந்த ஜனநாயக போராட்டம் அரசின் கவனத்தை தட்டை எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு  அமைப்புகள் ,இயக்கங்கள் சார்பாக  கோவை செஞ்சுலுவை சங்கம் முன்பு 30.11.2012 மாலை 4.30 மணிக்கு கண்டன ஆர்பாட்டம்  நடைபெற இருக்கிறது இந்த ஆர்பாட்டத்திற்கு  அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.அனைத்து முஹல்லாஹ் ஜமாத்துக்களும் இப்போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும்...அநியாயமாக சிறைபட்டவனை மீட்க்க போராடுவது ஈமானிய கடமை... சாமானிய மக்களான நமக்கு வல்ல அல்லாஹுவின் துணை எப்போதும் உண்டு. இம்மனிதநேய போராட்டத்தில் தமிழுணர்வாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Photobucket