அஸ்ஸலாமு அலைக்கும் **

Wednesday, November 21, 2012

தூக்கு மேடை ஏறும் முன்பு கசாப் கூறியது என்ன?

புனே: அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.
பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இன்று காலை
7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடும் முன்பு அவனின் கடைசி ஆசையைக் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்றான். ஆனால் தூக்கு மேடை ஏறும் முன்பு அவன் கூறுகையில், அல்லாஹ் மீது ஆணையாக மறுபடியும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவி்த்துள்ளான்.

முன்னதாக கடந்த 12ம் தேதியே கசாபிடம் அவனது தூக்கு தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவன் இந்த தகவலை தனது தாயிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளான்.

இந்நிலையில் கசாபின் தூக்கு குறித்து எழுத்தாளர் சோ கூறுகையில்,
தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டது சரி தான். இது அவசியம் என்று நினைக்கிறேன். சில கொடூர குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான தண்டனை அளிக்காத சமூகம் கட்டுப்பாட்டை இழக்கும். என்னைப் பொறுத்தவரை கசாபை தூக்கிலிட்டது சரியே. இந்த தூக்கு தண்டனை ரகியமாக வைக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. இதில் ரகசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்,
தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்திற்கு எதிரானது.
காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது. அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது.
மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Photobucket