அபுதாபி:சட்டவிரோதமாக
ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு
தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம்,
சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது
மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
டிசம்பர்
4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும்.
இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும்
வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை
பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம்.
இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி
மின்ஹலி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment