எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
அவர் கூறியதாவது: கல்விக் கூடங்களையும்,
மருத்துவமனைகளையும் நடத்தி மக்களின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் அக்கரை செலுத்த வேண்டிய அரசு இவற்றை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு மதுக்கடைகளை வீரியமாக நடத்துவது கவலைக்குரியது. கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இலவசங்களை வழங்குவதற்காக மட்டுமே மதுக்கடை வருமானங்கள் பயன்படுகிறது. இலவசங்களை வழங்குவதால் ஏற்படும் பயன்களைவிட மதுவினால் மக்களுக்கு ஏற்டும் பாதிப்பு மோசமானது. டாஸ்மாக் கடைகளில் அதிக விற்பனை நடைபெற வேண்டும் என அரசு நிர்பந்திப்பதால் வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஒன்று கூடும் இடங்களில் கூட புற்றீசல்கள் போல் மதுக்கடைகள் அதிகமாகி வருகின்றன.
இன்று மதுப்பழக்கத்தால் பெண்கள், மாணவமாணவிகள் சிறுவர்கள்கூட அடிமையாகி வருகின்றனர். இதனால் எதிர்கால சமுதாயம் பெரும் அபாயத்தை எதிர் நோக்குகிறது. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை இதர வழிகளின் மூலம் அரசு சரிகட்ட முடியும். தனியார் மணல் கொள்ளைகளை கட்டுப்படுத்தி மணல் விற்பனையை அரசே முழுமையாக ஏற்பதின் மூலமும் தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதின் மூலமும் டாஸ்மாக் வருமானத்தை விட பெரும் வருமானத்தை அரசு பெற முடியும்.
எனவே மக்களின் மீது அக்கறை கொண்டு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக அரசு கைவிடுவதோடு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அரசு அறிவிக்க வேண்டும். இதனை தேசத் தந்தை காந்திடியகள் பிறந்ததை நாட்டு மக்கள் நினைவு கூறும் அக்டோபர் - 2 க்குள் அறிவிக்க வேண்டும். இல்லையனில் இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2 ல் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைநகரங்கள் உட்பட முக்கிய நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தும்
. தொடர்ந்து 15 நாட்கள் மதுவின் தீமையை விளக்கியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுர விநியோகம், தெரு நாடகம் உட்பட பிரச்சார இயக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 17 ல் சென்னையில் தலைமை செயலகம் முன்பும் அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம், முன்பும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். முன்னதாக பல்வேறு தலைவர்கள் பங்குபெறும் கருத்தரங்கம் சென்னையில் வரும் 22 ம் தேதி நடைபெறும்.
மக்களுக்காக நடைபெறும் இப்போராட்டங்களில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் கலந்து கொள்வர். மாணவ மாணவிகள், பெண்கள் உட்பட பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன், வடசென்னை மாவட்ட தலைவர் S. அமீர் ஹம்சா, தென்சென்னை மாவட்டத் தலைவர் P. முஹம்மது உசேன், வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர்E. முஹம்மது ரஷீது, தென் சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் S. முஹம்மது சாலிஹ், மாநில ஊடகப் பொறுப்பாளர் B.S.I. கனி ஆகியோர் உடனிருந்தனர்

No comments:
Post a Comment