அஸ்ஸலாமு அலைக்கும் **

Monday, February 17, 2014

இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி!

பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று நடத்திய யூனிட்டி மார்ச் நிகழ்ச்சிக்கு காவல்துறை
முறையாக அனுமதி கொடுத்தனர் . அணிவகுப்பு ஆரம்பித்த சில நிமிடங்களில் காவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட சில விஷமிகள் கற்களை வீசி பதட்டத்தை ஏற்படுத்தினர். இந்த வாய்ப்பிற்காக காத்துக்கொண்டு இருந்த காவல் துறையினர் முஸ்லிம்கள் மீது கடுமையாக தடியடி நடத்தி உள்ளனர் . இதில் வழக்கறிஞர்கள் உட்பட பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற்களை வீசியவர்களில் இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் அவர்கள் இருவரும் காவல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்ஃபார்மர்கள் என்று தெரியவருகிறது. கற்களை வீசிய மேலும் சிலர் தப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Photobucket