அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, September 28, 2013

அரசியல் தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த கோரி சைதையில் SDPI கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

இந்தியாவில் 4 ஆண்டுகளில் சுமார் 555 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன என சமிபத்தில் மத்திய அரசின் புள்ளி விபரம் ஒன்று தெரிவித்திருந்தது. மேலும் பாராளுமன்ற
தாக்குதலும், மும்பை தாக்குதலும் அரசே திட்டமிட்டு நடத்தின என்று முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.இதுபோன்ற அரசியல் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியன் சார்பில் 2013 ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை தேசிய அளவில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென்சென்னை மாவட்டம் சைதை தொகுதியின் சார்பாக மாபெரும் அரிசயல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று(28.09.2013) சைதை குயவர் வீதியில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சைதை தொகுதி தலைவர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார்.தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட துணை தலைவர் அனீஸ் முஹம்மது, மாவட்ட செயலாளர்கள் அபூபக்கர் சித்திக், செய்யது இப்ராகிம், மாவட்ட பொருளாளர் சுஜாவுதின் ஆகியோர் தலைமை தாங்கினர்.சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் அமீர் ஹம்சா, வட சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் முஹம்மது சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிக் துவக்க உரை நிகழ்த்தினார். மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, பாப்புலர் ப்ரண்ட் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம், தென் சென்னை மாவட்ட பொது செயலாளர் ஜமால், எஸ்.டி.டி.யூ மாநில துணை செயலாளர் பல்லாவரம் அன்சாரி ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.சைதை தொகுதி இணை செயலாளர் ஜாகிர் ஹுசைன் நன்றியுரை ஆற்றினார். இந்த பொது கூட்டத்திற்கு மாவட்டம் மற்றும் சைதை தொகுதி நிர்வாகிகள்,எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்வீரர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Photobucket