அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, September 14, 2013

உத்தர பிரதேசம் கலவரம்:முலாயம் சிங் வீட்டை நோக்கி SDPI கட்சி மாபெரும் கண்டன பேரணி

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி SDPI கட்சியின் சார்பில் இன்று(10.9.2013) டெல்லி ஜந்தர் மந்தரில் முலாயம் சிங் வீட்டை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.


கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரியும், சுதந்திரமான விசாரணை கோரியும், வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், வகுப்புவாத அரசியலை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி பார்ட்டி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது.பேரணியாக சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த கண்டன பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் டெல்லி பிரதேச தலைவர் வழக்கறிஞர் முஹம்மது அப்பாஸ் தலைமை தாங்கி நடத்தினார்.இதில் ஏராளனமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Photobucket