அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, June 20, 2013

UAPA சட்டத்தினை திரும்பபெறக்கோரி மேலப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்

யுஏபிஏ(UAPA) என்று அழைக்கப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தினை இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது. தடா,
பொடா சட்டங்களுக்கு இணையாக ஏற்கனவே இருந்த இந்த சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மனித உரிமைக்கும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டமற்றும் பழங்குடிஇன மக்களுக்கும் எதிரானதாகும், எனவே இச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஜுன் 9 முதல் 18 வரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில்தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.


அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் நேற்று விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஹயாத் முகம்மது, சிந்தா, முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா வரவேற்றார்.
துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, அப்பாவி பொதுமக்களை பாதிப்பதாகவும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை காலதாமதமின்றி மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் செய்யது அப்துல் கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யுஏபிஏ சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களையும், பெங்களூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட மேலப்பாளையத்தை சேர்ந்த இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ப்பட கீழ்கண்ட 
தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.இந்த பொதுகூட்டதிற்க்கு ஆண்கள்,பெண்கள் உள்ப்பட 600மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்
பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. மக்கள் விரோத மனித உரிமைக்கு எதிரான, கொடுமைகள் நிறைந்த தடா, பொடா சட்டத்தைவிட, கொடிய கருப்பு சட்டமான திருத்தப்பட்ட uapa(யுஏபிஏ) என்னும் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம். மனித உரிமைக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது மேலும் இது துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது எனவே இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இந்த பிரச்சார கூட்ட்த்தின் மூலம் வலியுறுத்துகிறோம்.

2. மக்கள் விரோத UAPA(யுஏபிஏ )கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய இந்த பிரச்சாரக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. நாட்டின் பல்வேறு சிறைகளில் எந்த ஒரு விசாரனையுமின்றி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் பல ஆண்டுகளாக சிறையில் அடைபட்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஜாமீன் இன்றி சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஜாமீன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை இந்த பிரச்சாரக் கூட்டம் வலியுறுத்துகிறது.

4. பெங்களூர் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பில் தொடர்பு படுத்தி தமிழக இளைஞர்களை அநியாயமான முறையில் uapa(யுஏபிஏ) சட்டத்தின் கீழ் கைது செய்ததை இந்த பிரச்சாரக் கூட்டம் கண்டிப்பதோடு , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் இவ்வழக்கு போலி வழக்கு என்பதால் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என இந்த பிரச்சாரக் கூட்டம் வலியுறுத்துகிறது. 5. கர்நாடக காவல்துரையால் கைது செய்யப்பட்டு எந்த ஒரு விசாரணையுமின்றி 4 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டிருக்கும் கேரளா பி.டி.பி தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்ய இந்த பிரச்சாரக் கூட்டம் வலியுறுத்துகிறது.

6. தமிழகத்தின் கோவை, குமரி உள்ளிட்ட சில பகுதிகளில் மத துவேசத்தை தூண்டி அதன் பேரில் முஸ்லிம் இளைஞர்களை போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவதை கண்டிப்பதுடன் முறையான நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசை இந்த பிரச்சாரக் கூட்டம் வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment

Photobucket