அஸ்ஸலாமு அலைக்கும் **

Tuesday, June 11, 2013

சொத்து வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய சில ஆவணங்கள்

சொத்து மற்றும் அதன் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பது என்பது ஒரு சொத்து வங்கும் பொழுது செய்ய வேண்டிய முதல் வேலை ஆகும். அதைச் சரியாக செய்யவில்லை எனில் பேரழிவை சந்திக்க கூடும். ஒரு சொத்து வாங்கும் முன் சட்ட நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்ததாகும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல் முழுமையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் மிகவும் முக்கியமானது. எனவே ஒரு சொத்து வாங்கும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல வழக்கறிஞரை ஆலோசித்து அவருடைய ஆலோசனையைப் பெறுவது என்பது உங்களை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். அதன் பிறகு அது ஒரு வாழ்நாள் முழுவதற்குமான முதலீடு ஆகும். மேலும் அது உங்களுடைய ஒரு விலையுயர்ந்த சொத்தாகும். மூலப் பத்திரம் விற்பனையாளரிடம் இருந்து
 
மூலப் பத்திரத்திற்கான
 
நகலைப் பெற்று அதை சரிபார்க்க வேண்டும். இதுவே முதன்மையானது மற்றும் இன்றியமையாதது. இந்த சொத்து, சொத்தை விற்பவரின் பெயரில் உள்ளதா?, மற்றும் அவருக்கு சொத்தை விற்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளதா?, என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்கு இது உதவும். அதன் பிறகு அசல் பத்திரத்தை சொத்து விற்பவரிடம் இருந்து பெற்று அதையும் சரி பார்க்க வேண்டும். ஏனெனில் அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசங்கள் இருக்கக் கூடும். மேலும் சொத்து விற்பவர் அசல் பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றிருக்கலாம். ஆகவே அசல் பத்திரத்தை ஒரு வழக்கறிஞரிடம் காட்டி அதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வில்லங்கச் சான்றிதழ் ஒரு சொத்தில் வில்லங்கச் சான்றிதழ் இருந்தால் அந்த சொத்திற்கு கடன் பொறுப்பு இருக்கிறது என்று அர்த்தம். எடுத்துக்காட்டாக, உரிமையாளர் ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கியில் இருந்து கடன் பெறுவதற்காக தனது சொத்தை அடமானம் வைத்திருக்கலாம், அது வில்லங்கச் சான்றிதழில் பிரதிபலிக்கும். எனவே
 
வில்லங்க சான்றிதழ்
 
என்பது அந்த சொத்தின் மேல் எந்த விதமான கடன்களும் இல்லை என்பதை உறுதி செய்ய உதவும். சொத்து வரி சொத்து வரி என்பது சொத்தின் மதிப்பின் அடிப்படையில் சொத்து உரிமையாளர் அரசாங்கத்திற்கு செலுத்தக் கூடிய வரி ஆகும். எனவே உள்ளாட்சி அதிகாரிகளிடமிருந்து சொத்தின் உரிமையாளர், சொத்து வரியை பாக்கியின்றி செலுத்தியிருக்கிறாரா? என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சொத்து விற்பனையாளரிடமிருந்து சமீபத்திய வீட்டு வரி ரசீதை கேட்டுப் பெறலாம். அந்த ரசீதில் கட்டணம், உரிமையாளர் பெயர், தேதி போன்றவற்றை சரி பார்த்து கொள்ளலாம்.
 
தடையற்ற சான்றிதழ்
 
ஒரு சில சொத்துகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்க முடியும். இது போன்ற சொத்துகளில் மற்ற உரிமையாளர்களிடாமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழைப் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

Photobucket